ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறிவிழுந்து வாலிபர் பலி
ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறிவிழுந்து வாலிபர் பலியானார்.;
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஏழரைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் புகழ் (வயது 35). இவர் சென்னையில் வேலை செய்து வந்தார். ஊருக்கு வந்திருந்தார். அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இது குறித்து தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று கிணற்றில் மூழ்கிய புகழை பிணமாக மீட்டனர். பின்னர் இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததினர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.