திற்பரப்பில் சுற்றுலா பயணிகளின் காரில் செல்போன், பணம் திருட்டு

திற்பரப்பில் சுற்றுலா பயணிகளின் காரில் செல்போன், பணம் திருட்டு

Update: 2022-04-11 18:17 GMT
குலசேகரம், 
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரும் அதே பகுதியை சேர்ந்த 7 பேரும் காரில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தனர். காரை சாலையோரம் நிறுத்தி விட்டு அனைவரும் குளிக்க சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த 3 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் கார் கதவை திறந்து செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்