குளச்சலில் மரம் விழுந்து 2 ஆட்டோக்கள் சேதம்
குளச்சலில் மரம் விழுந்து 2 ஆட்டோக்கள் சேதமடைந்தன.
குளச்சல்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குளச்சல் நகராட்சி அலுவலகம் முன்பு ஆட்டோ நிறுத்தம் பகுதியில் நின்ற ஒரு மரம் நேற்று காலையில் திடீரென வேரோடு சாய்ந்தது.
இந்த மரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் மீது விழுந்தன. இதில் சாகுல் ஹமீது, சேவியருக்கு சொந்தமான ஆட்டோக்கள் சேதமடைந்தன. பின்னர் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.