இலுப்பூர் கம்பர் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கம்பர் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-11 18:09 GMT
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் பழங்கால கம்பர் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் சுமார் 30 ஆண்டுக்கு முன்னர் சுற்று பகுதிகளில் வாழும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நன்னீர் குளமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்சமயம் இந்த குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து குளத்தின் அளவை சுருக்கி கொண்டே வருவதாக கூறப்படுகிறது. அது ஒரு புறம் இருக்க சுற்று பகுதியில் வாழும் மக்கள் பயன்படுத்தி வெளியிடும் சாக்கடை கழிவுநீர் செல்ல போதிய கழிவுநீர் கால்வாய் வழித்தடம் இல்லாத காரணத்தால் நேரடியாக கழிவுநீர் குளத்தில் விடப்படுகிறது. இப்படி சாக்கடை கழிவுநீர் கலப்பதால் ஒரு காலத்தில் குடிநீராக இருந்த இந்த குளத்து தண்ணீர் தற்போது பயனற்ற நிலையில் மாசு நிறைந்த குளமாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள குளமாகவும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாக்கடை கழிவுநீர் செல்ல மற்றுப்பாதை அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்