மதுபாட்டில்களுடன் 6 பேர் கைது

176 மதுபாட்டில்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-11 18:07 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமு, கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நகரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த சின்னக்கடை நவாஸ் செரீப் (வயது30), தேவிபட்டினம் அருகே சம்பை சசிகுமார் (32), வாலாந்தரவை முருகேசன் (51), பூமிநாதன் (42), சிவகங்கை புலிக்குளம் காசிலிங்கம் (48), திருப்புல்லாணி அருகே உத்தரவை முனியசாமி (50) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 176 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்