தேவகோட்டை,
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் பாண்டித்துரை. அவரது மனைவி முனியம்மாள் (வயது66). பாண்டித்துரை துணை வட்டாட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர்.இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த 10-ந் தேதி முனியம்மாள் எனக்கு மனது சரியில்லை நான் புதுக் கோட்டை மாவட்டம் கொன்னையூர் மாரியம்மன் கோவி லுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வருகிறேன் என்று சென்றவர் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில் நேற்று காலை தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் மூழ்கி முனியம்மாள் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம மக்கள்ஆறாவயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.