ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதல்
ஆரணி அருகே ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்
ஆரணி
ஆரணி அருகே சித்தேரி கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 22), விந்தியா (23), சுவாதி (21) ஆகிய மூவரும் ஆரணியில் உள்ள ஜவுளி கடைகளில் வேலை செய்கின்றனர். நெசல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.
நேற்று இவர்கள் 4 பேரும் ஆரணி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருடைய ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சென்றபோது சேத்துப்பட்டு சாலையில் இருந்து ஆரணி நோக்கி வந்த காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஐஸ்வர்யா, விந்தியா, சுவாதி, சீனிவாசன், ஸ்ரீதர் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகிறார்.