தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-04-11 18:05 GMT
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள புதுத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி சங்கீதா(வயது 42). இவர் கூலி தொழிலாளி. கருப்புசாமிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். சங்கீதா சற்று உடல்நிலை சரி இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனக்குத் தானே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் கலியபெருமாள் (23) கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்