அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் சந்திரகலா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.