முதுகுளத்தூர் பகுதியில் பலத்த மழை
முதுகுளத்தூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் பலத்த மழை பெய்தது. இதனால் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமங்களான செல்வநாயகபுரம், காக்கூர், கீரனூர், நல்லூர், ஏனாதி, பூங்குளம், ஒருவனேந்தல் சாக்குளம், பேரையூர், இலந்தைக்குளம், தேரிருவேலி விளங் குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை மாலை 5 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. முதுகுளத்தூரில் பள்ள மான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பலத்த மழையால் முதுகுளத்தூர் சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.