கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

தேனி அல்லிநகரத்தில் கொத்தனார் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-04-11 17:57 GMT
தேனி : 

தேனி அல்லிநகரம் வள்ளி நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 38.) கொத்தனார். வீட்டில் அவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரபு கடந்த 3-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பிரபு உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்