நாமகிரிப்பேட்டை பகுதியில் கோடை மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமகிரிப்பேட்டை பகுதியில் கோடை மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி;

Update: 2022-04-11 17:56 GMT
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மதியம் வரை இந்த வெயில் நீடித்தது. இதையடுத்து 1 மணி அளவில் கருமேகம் திரண்டு திடீர் கோடை மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் வரை இந்த மழை பெய்தது. இதையடுத்து மாலை 4 மணி அளவில் மீண்டும் கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. சுமார் ½ மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது. இந்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்