பிளஸ்2 மாணவி கடத்திய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்2 மாணவி கடத்திய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது;

Update: 2022-04-11 17:56 GMT
ஆரணி

ஆரணி தாலுகா பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். 

இவரை ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான முத்துக்குமரன் (வயது 24) என்பவர் கடத்தி சென்றதாக ஆரணி டவுன் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாணவியை கடத்திய முத்துக்குமரனை போலீசார் பிடித்தனர். பின்னர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டு அவரை ஒப்படைத்தனர். 

இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து  முத்துக்குமரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்