மோகனூர்:
மோகனூர் பேரூராட்சி அவசர கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரவண குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்து வரி உயர்வு விதிப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.முக உறுப்பினர்கள் ராஜவடிவேல், வாசுகி ஆகியோர் பேரூராட்சி தலைவருக்கு மனு அளித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.