நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் நெசவாளர்கள் மனு

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் நெசவாளர்கள் மனு

Update: 2022-04-11 17:56 GMT
நாமக்கல்:
வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
நாமக்கல் மாவட்டத்தின் மிகவும் முக்கிய தொழிலாக உள்ளது விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவுத்தொழில். இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருள் பருத்தி நூல் ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 50 கிலோ எடை கொண்ட நூல் (40-ம் நம்பர்) ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனையானது. பிறகு படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.17 ஆயிரமாக விலை உயர்ந்து உள்ளது. இந்த விலையேற்றம் நெசவுத்தொழிலை புரட்டி போட்டு உள்ளது. நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நூல் விலை உயர்வால் தொடர்ந்து தொழிலை இயக்க முடியாத சூழல் உள்ளது. விசைத்தறி கூடங்களை மூடும் அபாயம் உள்ளது. எனவே நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பருத்தி நூல் விலையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்