புதுச்சத்திரம் அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சத்திரம் அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை;

Update: 2022-04-11 17:55 GMT
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே உள்ள பி.ஆயிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை தங்கத்துரை மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார்.
அப்போது அவருடைய மனைவி திவ்யா சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவு செய்ததால், குடும்பத்தை எப்படி நடத்துவது என உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் அவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தங்கத்துரையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்தும் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்