நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க தடுக்க போலீசார் தீவிர சோதனை
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க தடுக்க போலீசார் தீவிர சோதனை;
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க நேற்று கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் மனு கொடுக்க வரும் நபர்கள் பாட்டிலில் மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டு வருகிறார்களா? என சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
அப்போது மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சொந்த உபயோகத்திற்கு பெட்ரோலை வாங்கி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.