குறைந்த விலையில் கணினி உபகரணங்கள் வழங்குவதாக கூறி வாலிபரிடம் மோசடி செய்த ரூ 30 ஆயிரம் மீட்பு

குறைந்த விலையில் கணினி உபகரணங்கள் தருவதாக கூறி வாலிபரிடம் இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.30 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

Update: 2022-04-11 17:54 GMT
தர்மபுரி:
குறைந்த விலையில் கணினி உபகரணங்கள் தருவதாக கூறி வாலிபரிடம் இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.30 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
பண மோசடி
தர்மபுரி அருகே உள்ள அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் வினோத் தாமஸ் (வயது 27). குறைந்த விலைக்கு கணினி உபகரணங்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வந்த தகவலை பார்த்தார். பின்னர் இவர் அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். பிறகு இவர்் அந்த எண்ணில் பேசிய  நபருக்கு இணைய வழி பண பரிமாற்றம் மூலம் ரூ.30 ஆயிரத்து 200 செலுத்தி, கணினி உபகரணத்தை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் அந்த நபர் கணினி உபகரணங்களை அனுப்பாமல் காலதாமதம் செய்து ஏமாற்றி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத் தாமஸ் இந்த மோசடி குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசாருக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அந்த பணத்தை உடனடியாக மீட்டனர். 
ஒப்படைப்பு
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வினோத் தாமசிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறுகையில், இதுபோன்ற ஆன்லைன் பண மோசடி குறித்து www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும். குறைந்த விலைக்கு பொருட்களை வாங்க ஆசைப்பட்டு ஏமாறக்கூடாது. போலியாக வரும் அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் நம்பி பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை யாரிடமும் சொல்லக்கூடாது. யாருக்கும் பகிர கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்