மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.;

Update: 2022-04-11 17:52 GMT
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சம்பா (வயது 65). இவர் நேற்று முன்தினம் ஆல்மாரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கும்மனூரை சேர்ந்த நாகராஜ் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்