பஸ் படியில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே வர சொன்ன கண்டக்டருடன் வாக்குவாதம்

பஸ் படியில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே வர சொன்ன கண்டக்டருடன் வாக்குவாதம்

Update: 2022-04-11 17:49 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். 

இதுபோன்ற பயணத்தினால் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது என கூறினாலும், எந்தவித அச்சமும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து படிகளில் தொங்கியபடியே பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இந்த நிலையில் இன்று காலை புதுப்பாளையத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. 

இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சிலர் படியில் நின்று பயணம் செய்துள்ளனர். கண்டக்டர் அவர்களை உள்ளே வர சொல்லியுள்ளார்.

 அப்போது மாணவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  

திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் வரும்போது படியில் தொங்கியபடி வந்த மாணவர்களும், கண்டக்டருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டு பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது.

 அப்போது மாணவர்களில் ஒருவர் கண்டக்டரை மிரட்டியதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து உடனடியாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் வருவதை அறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தொடர்ந்து பஸ்சை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு டிரைவரும், கண்டக்டரும் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

 இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்