வேலூர் அருகே ஆம்புலன்சில் ‘குவா, குவா’
வேலூர் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.
வேலூர்
அணைக்கட்டு தாலுகா நாச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், விவசாயி. இவரது மனைவி சந்தூரா (வயது 23). இவர் கர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் அவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர் நேதாஜி அங்கு விரைந்து சென்று அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்றார். மூலனூர் என்ற பகுதி அருகே சென்றபோது திடீரென அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. எனவே ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் செல்வி, சந்தூராவுக்கு பிரசவம் பார்த்தார். அதில் சந்தூராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் இருவரும் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.