மினி சரக்கு வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
கம்பத்தில் மினி சரக்கு வாகன உரிமையாளர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கம்பம்:
கம்பத்தில் கர்னல் ஜான் பென்னிகுயிக் சரக்கு ஏற்றும் மினி வாகன தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கம்பத்தில் சரக்கு ஏற்றும் மினி வாகனங்கள் முழுவதும் இயங்கவில்லை.
இது குறித்து சங்க தலைவர் செல்வபிரபு கூறுகையில், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது, பொதுமக்களிடம் அதிக வாடகை பெற முடியவில்லை. நிதி நிறுவனங்களுக்கு தவணை செலுத்த முடியவில்லை, எனவே எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மேலும் புதிய வாடகை உயர்வுக்கு பொதுமக்கள் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.