பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுமக்கள் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

Update: 2022-04-11 17:32 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடைபெற்றது. 
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 22 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 15 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகைகோரி 20 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 10 மனுக்களும், புகார் தொடர்பாக 20 மனுக்களும், கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கேட்டு 15 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கி கடன் கோரி 35 மனுக்களும் என மொத்தம் 137 மனுக்கள் பெறப்பட்டன. 
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவி
 பின்னர் மயிலாடுதுறை மடப்புரம் கிராமத்தை சேர்ந்த மன்சூர் என்பவர் சவுதி அரேபியாவில் இறந்ததையடுத்து அவரது மனைவி நூர்ஜகானுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்து 263-க்கான காசோலையையும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையையும் கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர்(கலால்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்