கள்ளக்காதலி பிரிந்ததால் வாலிபர் தற்கொலை
கோவை மலுமிச்சம்பட்டி அருகே கள்ளக்காதலி பிரிந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை
கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள வானொலி நகரை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 26). தொழிலாளி. இவருக்கு திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து வீரகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த இளம்பெண் வீரகுமாரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த வீரகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.