வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம்; வாலிபர் கைது

புதுக்கடை அருேக வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்ததில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-11 17:21 GMT
புதுக்கடை:
 புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். ஒரு வீட்டில் புகுந்து சோதனை நடத்திய போது ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அரைகுறை ஆடையுடன் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அருமனை பகுதியை சேர்ந்த கனிஸ் (வயது31) என்பதும், அந்த இளம்பெண் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த ராஜகுமார் (45) என்பவர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து வெளியூர்களில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து விபசாரம் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட வாலிபர் கனிசை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜகுமாரையும், வீட்டின் உரிமையாளரையும் தேடி வருகிறார்கள். மேலும், மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

மேலும் செய்திகள்