வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ரகு (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பு அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், ரகுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துச்சென்று விட்டார். இதுகுறித்து ரகு, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் ரகுவிடம் வழிப்பறி செய்தவர் கண்டாச்சிபுரம் தாலுகா ஆயந்தூரை சேர்ந்த இசையாஸ் மகன் ஆபேஸ்பெர்னாண்டஸ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.