திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிரணி செயலாளர் மாலதி தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும், சொத்துவரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அபரிமிதமான நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன் (திருப்பூர் மாநகர்), பிரசாத் (வடக்கு), ஆறுச்சாமி (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு தொகுதி பொறுப்பாளர் கண்ணன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சரவணன், செந்தில்குமார் உள்பட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.