மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சிறுவன் சாவு
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.;
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் வினித் (வயது 18). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று புஷ்பவனத்தில் இருந்து செம்போடை கடைத்தெருவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது செம்போடை தெற்கு கடைத்தெருவில் சென்ற போது மோட்டார் சைக்கிள் இருந்து சிறுவன் வினித் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினித் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.