கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
பெங்களூரு:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டிகளின் போது பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், காமாட்சிபாளையா அருகே ஸ்ரீராமநகர் மெயின் ரோட்டில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றதற்காக பணத்தை வாங்குவதற்காக ஒரு நபர் வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர். ஒரு கடையின் அருகே சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் ரூ.2 லட்சம் இருந்தது. அந்த பணம் கிரிக்கெட் சூதாட்டத்தின் மூலம் கிடைத்தது என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் கணேஷ் என்றும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியதில் இருந்து ஒரு செல்போன் செயலி மூலமாக சூதாட்ட தரகர்களுடன் தொடா்பை ஏற்படுத்தி சூதாடி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கணேஷ் மீது காமாட்சி பாளையா போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.