சீதா ராமாலயம் கோவிலில் ராம நவமி விழா

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம் கிராமத்தில் சீதா ராமாலயம் கோவிலில் நேற்று ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-04-11 15:20 GMT
இந்த விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். இந்த விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பொன்னேரியில் வரலாறு புகழ்மிக்க முற்கால சோழ மன்னனான கரிகால் சோழனால் கட்டப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் கோதண்டராமனுக்கு தனி சன்னதியுடன் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு நேற்று ராமநவமி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அனுமான் வாகனத்தில் சீதாதேவி கோதண்டராமர் லட்சுமணன் ஆகியோர் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதேபோல் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் எழுந்தருளி உள்ள கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்