கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் மத்தியபாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாராம். இதனால் மணிகண்டனுக்கு மாஜிஸ்திரேட்டு பிடிவாரண்டு பிறப்பித்தார். அதன்பேரில் மத்தியபாகம் போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.