ராம நவமி சப்பர ஊர்வலம்

ராம நவமி சப்பர ஊர்வலம்;

Update: 2022-04-11 14:53 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலையில் அங்குள்ள ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தங்களது தோளில் சப்பரத்தை சுமந்தவாறு திம்பட்டி கிராமத்தில் உள்ள சுமார் 150 வீடுகளுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். 

அப்போது பக்தர்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இதையடுத்து இரவு 9 மணியளவில் திருவீதி உலா நிறைவு பெற்றபிறகு ராமரை மீண்டும் கோவிலுக்கு திரும்ப அழைத்து வந்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திம்பட்டி கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு ராமரை வழிபாட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்