வாசனை திரவிய கண்காட்சி நடத்த ஆர்.டி.ஓ. ஆலோசனை

கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்த ஆர்.டி.ஓ. ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-04-11 14:52 GMT
கூடலூர்

கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்த ஆர்.டி.ஓ. ஆலோசனை நடத்தினார்.

கோடை விழா

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா, கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கூடலூரில் கோடை விழா நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் கூடலூரில் அடுத்த மாதம்(மே) 13-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.  இதற்கிடையில் கூடலூரில் கோடை விழா நடத்துவது தொடர்பான முதற்கட்ட ஆலோசனை கூட்டம், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டுகள் குமார், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் செய்திகள்