இயற்கை வேளாண்மை முறை சாகுபடி- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
தோட்டக்கலைத் துறை சார்பாக 10 ஏக்கர் நிலப்பரப்பில், சொட்டுநீர் பாசனம் மூலம் இயற்கை வேளாண்மை முறையில் தர்பூசணி சாகுபடி மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சார்பாக 10 ஏக்கர் நிலப்பரப்பில், சொட்டுநீர் பாசனம் மூலம் இயற்கை வேளாண்மை முறையில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் எபினேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயகுமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.