மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

Update: 2022-04-11 13:06 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த இருளப்பன் மகன் மாரியப்பன் (வயது 45). தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டிலிருந்து சிறுநீர் கழிக்க வெளியே வந்துள்ளார். அருகிலுள்ள மின் கம்பம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்தவுடன் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்