ரூ.12 லட்சம் மதிப்பிலான 90 செல்போன்கள் மீட்பு
திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 90 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஒப்படைத்தார்.;
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 90 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஒப்படைத்தார்.
செல்போன்கள் திருட்டு
திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக பலர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவுப்படி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
90 செல்போன்கள் ஒப்படைப்பு
இதில் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீட்கப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 90 செல்போன்களை அதன் உரிமையாளர்களை நேரில் அழைத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறியதாவது
பாராட்டு
திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன செல்போன்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மீதி உள்ள புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்படும். பொதுமக்களும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் துரிதமாக விசாரணை நடத்தி செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.