மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

Update: 2022-04-11 11:49 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துசாமி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை ஊரின் அருகே ஆடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர், தங்கம்மாள்புரம் பெத்தனாட்சி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, சூரங்குடியிலிருந்து தங்கம்மாள்புரம் நோக்கி அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் அவர் பலியானார். இதுகுறித்து தகவலறிந்தவுடன் சூரங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி ராமலிங்கம் மகன் மோகன்ராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்