காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியிடம் நகை-பணம் பறித்ததாக பெற்றோர் புகார்; வாலிபரிடம் போலீசார் விசாரணை
காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியிடம் நகை-பணம் பறித்ததாக பெற்றோர் கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் அகிலா 17 வயதுடைய பெண்ணின் பெற்றோர், கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில், தங்களது மகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க சங்கிலி ஒன்றை வாலிபர் ஒருவர் பறித்து விட்டார் என்றும், அறியாத வயதில் தங்களது மகளிடம் மோசடியில் ஈடுபட்ட அந்த வாலிபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி குறிப்பிட்ட வாலிபரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.