நாகர்கோவிலில் இன்று கோரிக்கை அட்டை போராட்டம்
நாகர்கோவிலில் கோரிக்கை அட்டையை அணிந்து பள்ளிக்கு செல்லும் போராட்டம் இன்று நடத்தப்பட உள்ளது.
நாகர்கோவில்,
அரசு பள்ளிகளுக்கு இணையாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் அரசின் உதவித் தொகையை வழங்கக் கோரி நாகர்கோவில் இன்று கோரிக்கை அட்டை போராட்டம் நடைபெற உள்ளது.
அதே போல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் ஊதியம் இல்லாமல் பணி செய்யும் 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 31-3-2021 அன்று வழங்கப்பட்ட கோர்ட்டு தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 11-ந் தேதி (இன்று) தமிழக சட்டப் பேரவையில் கல்வி மானியக் கோரிக்கை விவாதிக்கப்படும் போது 3 அம்ச கோரிக்கை அடங்கிய அட்டையை அணிந்து பள்ளிக்கு செல்லும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.