லேப்டாப் திருடிய பட்டதாரி மாணவர் கைது
ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் லேப்டாப் திருடிய பட்டதாரி மாணவர் கைது.
பெரம்பூர்,
சென்னை வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தனியாக விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கி மருத்துவம் படிக்கும் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ருத்ரேஷ் (வயது 22) மற்றும் அக்சய் ஆகியோருக்கு சொந்தமான 2 லேப்டாப் அறையில் இருந்து திருட்டு போனதாக வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25) என்ற பி.ஏ.பட்டதாரி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், கடந்த 5 ஆண்டுகளாக டிப்-டாப்பாக உடை அணிந்து கொண்டு கல்லூரி விடுதிகளில் லேப்டாப் திருடுவது வழக்கமாக வைத்ததும் தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 31 லேப்டாப்பில் பறிமுதல் செய்தனர்.