மாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-04-10 23:02 GMT
திருச்சி:
மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தொழிற்சாலைகள் பகுதி, மாத்தூர், குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ தொழிற்பேட்டை, ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், ஆவூர்-நால்ரோடு, ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, துரைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலை சமுத்திரம் மற்றும் வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல் கீரனூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்