கொள்முதல் நிலையத்தில் 8 நெல் மூட்டைகள் திருட்டு

கொள்முதல் நிலையத்தில் 8 நெல் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-04-10 23:02 GMT
லால்குடி:
லால்குடி அருகே செங்கரையூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்த சம்பா நெல்மணிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை மூட்டைகளாக கட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்து, பின்னர் அந்த நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி குடோனுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை நெல் கொள்முதல் நிலையத்திற்கு பணிக்கு வந்த ஊழியர்கள் பார்த்தபோது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் குறைந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் நெல் மூட்டைகளை எண்ணி பார்த்தபோது, அதில் 8 நெல் மூட்டைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்