2 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொன்றவர்: பெங்களூரு சிறையில் வாலிபர் தற்கொலை

2 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான வாலிபர், பெங்களூரு சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-10 22:11 GMT
பெங்களூரு:

பலாத்காரம் ெசய்து கொலை

  பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நெலூர் கிராமத்தை சேர்ந்தவர் தீபு (வயது 31). டிரைவரான இவர் வாடகை கார் ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி உறவினர் ஒருவரின் 2 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, காாில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடினார்.

  இதையடுத்து அத்திபெலே போலீசார் தீபுவை பிடித்து விசாரித்தபோது, அவர் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக் கொண்டார். பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

  இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறையில் உள்ள கழிவறைக்கு சென்ற தீபு, போர்வை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை ஊழியர்கள் பரப்பன அக்ரஹாரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

  அதன்பேரில் சிறைக்குள் சென்ற போலீசார் தீபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீபு தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்