வருங்கால மனைவி வீடியோ கால் பேசாததால் ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

வருங்கால மனைவி வீடியோ காலில் பேசாததால் ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-10 21:50 GMT
பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா நந்தகுடி பகுதியில் வசித்து வந்தவர் தவுசிப் பாஷா (வயது 27). இவர் ஊர்க்காவல் படை வீரர் ஆவார். இந்த நிலையில் தவுசிப் பாஷாவுக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனது வருங்கால மனைவியுடன் தினமும் இரவு தவுசிப் பாஷா வீடியோ கால் பேசி வந்து உள்ளார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் தவுசிப் பாஷா, வருங்கால மனைவியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அந்த இளம்பெண் சரியாக பேசவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு இளம்பெண் தவுசிப்புடன் வீடியோ கால் பேசவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த தவுசிப் பாஷா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மேலும் செய்திகள்