திப்பு சுல்தானின் வரலாறை மூடி மறைக்க சதி; பா.ஜனதா எம்.எல்.சி. குற்றச்சாட்டு

திப்பு சுல்தானின் வரலாறை மூடி மறைக்க சதி செய்யப்படுவதாக பா.ஜனதா எம்.எல்.சி. குற்றம்சாட்டி உள்ளார்.;

Update: 2022-04-10 21:42 GMT
மைசூரு:

மைசூரு டவுன் மானச கங்கோத்ரி கல்வி மையத்தில் பேராசிரியர் நங்ஜராஜ அரஷ் எழுதிய திப்பு சுல்தான் தொடர்பான புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான எச்.விஸ்வநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-

   மைசூரு மகாணத்தை ஆண்ட திப்பு சுல்தான் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அவரிடம் தேசப்பற்று அதிகமாக இருந்தது. திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களிடம் போராடி இந்திய நாட்டை தலைநிமிர வைத்தவர். உலக அளவில் பெரிய மன்னர்கள் கூட எதிராளிகளிடம் மண்டியிட்ட வரலாறு உண்டு. 

ஆனால் திப்பு சுல்தான் போர்க்களத்தில் நின்று போராடி வீரமரணம் அடைந்தவர். ஆனால் தற்போது திப்பு சுல்தானை சிலர் கிண்டலாக பேசி அவரது வரலாற்றை மூடி மறைக்க சதி நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் மாநிலத்தில் கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை, ஹலால் விவகாரம் தொடர்பான பிரச்சினை கிளம்பியுள்ளது. இது ஒருவரின் சொத்தை பிடுங்கி திண்பதற்கு சமம். ஆனால் இதனை கண்டிக்காமல் மடாதிபதிகள் ஊமையாக இருந்து வருகின்றனர்.
  இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்