ஆடு திருடிய 2 பேர் கைது

நாகர்கோவிலில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-10 21:27 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் முதலியார்விளையை சோ்ந்தவர் அந்தோணி சவரிமுத்து (வயது 53). இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை இரவில் வீட்டின் பின்புறம் கயிற்றால் கட்டிபோட்டு இருந்தார். நள்ளிரவில் ஆடுகளின் சத்தம்கேட்டு, அந்தோணி சவரிமுத்து சென்று பார்த்தார். அப்போது 2 பேர் ஒரு ஆட்டை திருடி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதுகுறித்து அந்தோணி சவரிமுத்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோட்டார் பகுதியை சேர்ந்த நாகராஜன், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து, ஆட்டை மீட்டனா். திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்