கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
கடத்தூர்
கோபியை அடுத்த கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் இருந்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதாலும், கோடை வெயில் அதிகமாக இருந்ததால் கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு அவர்கள் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை பகிர்ந்து உண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். அதுமட்டுமின்றி பரிசல் பயணமும் சுற்றுலா பயணிகள் மேற்கொண்டனர்.
முன்னதாக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.