ஈரோடு
ஈரோடு ஸ்டோனிபாலம், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களின் வியாபாரம் மும்முரமாக காணப்படும். நேற்றும் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால், மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் விலையும் சற்று உயர்ந்தது.
கடந்த வாரத்தை காட்டிலும் ஒரு கிலோ மீன் விலை ரூ.25 முதல் ரூ.50 வரை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ ஊளி மீன் ரூ.350-க்கும், வஞ்சிரம் ரூ.700 முதல் ரூ.800 வரையும், சங்கரா ரூ.350-க்கும், ராட்டு ரூ.500-க்கும், மத்தி ரூ.150-க்கும், பாறை ரூ.450-க்கும், நண்டு ரூ.350-க்கும், நெத்திலி ரூ.250-க்கும் விலை போனது.