போலி டீத்தூள் விற்றவர் மீது வழக்கு

மதுரையில் போலி டீத்தூள் விற்றவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-04-10 20:48 GMT
மதுரை,

மதுரை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் வினியோகஸ்தருக்கு தெரிய வந்தது. எனவே அது தொடர்பாக அந்த நிறுவனத்தின் வினியோகஸ்தர் பெங்களூரைச்சேர்ந்த சோமசுந்தரம் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மேல அனுப்பானடியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 51) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது வீட்டில் ரூ.17,400 மதிப்புள்ள போலி டீத்தூள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்