மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியரின் மனைவி சாவு

சமயநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியரின் மனைவி இறந்தார்.

Update: 2022-04-10 20:34 GMT
வாடிப்பட்டி, 

 சமயநல்லூர் அருகே பரவை ஊர்மெச்சிகுளம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் நேரு (வயது 56). இவர் பரவை பவர்ஹவுசில் மின்வாரிய அலுவலகத்தில் லயன்மேன் ஆக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (45). இவர் நேற்று காலை 7 மணிக்கு வீட்டின் அருகே குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் ஆனந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்